
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (13.2.2018) தலைமைச் செயலகத்தில், திருப்பூர் கொங்கு விளையாட்டு குழுவின் தலைவர் என்.வேலுசாமி மற்றும் நிர்வாகிகள், கவிஞர் கவிதாசன், தமிழ் ஆர்வலர்கள் கே.ஜி அன்பு, கே.எம்.ஈஸ்வரமூர்த்தி, கே.ஆர்.சிவக்குமார் ஆகியோர் சந்தித்து, ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக, 70 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். உடன் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந.அருள்.