டாடா டீயின் கோவிட்-19 தடுப்பூசி விழிப்புணர்வு பதிப்பு அறிமுகம்

டாடா டீ தற்போதுள்ள நோய்த்தொற்றுக்கான காரணம் குறித்த விழிப்புணர்வு பரப்பப்படுவதை, நோக்கமாகக் கொண்டு “சப்கேலியே ஜாகோரே” வை  துவங்கியுள்ளது. அன்றாட வாழ்வில் மக்களுக்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்களுக்கு மக்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டுமென்று வலியுறுத்துகிறது.

கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட இஸ் பார் பாதோன்கேலியே ஜாகோரே  திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், இந்த முறை சப்கேலியே ஜாகோரே முயற்சியானது கோவிட்-19 தடுப்பூசிப் பயணத்தில் ஈடுபடுபவர்களுக்கு உதவுமாறு மக்களை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தடுப்பூசி செலுத்துதல் குறித்த குறைவான புரிதல் கொண்ட அல்லது தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு மேற்கொள்ளும் தளங்கள் அல்லது சரியான அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முடியாமல் தவிக்கும் வேலையாட்கள், ஓட்டுநர்கள், பாதுகாவலர்கள், தோட்டப் பராமரிப்பாளர்கள் போன்ற தினசரிப் பணியாளர்களுக்கு உதவ முன்வரும் தனிநபர்களுக்கு அழைப்பு விடுக்கிறது இம்முயற்சி.

இம்முயற்சி பற்றி பேக்கேஜ்டு பீவரேஜஸ் பிரிவு (இந்தியா அண்டு தெற்காசியா) தலைவர் புனீத் தாஸ் பேசுகையில், விழிப்புணர்வைப் பரப்புவதன் மூலமாக, மிகப்பெரிய சமூகப் பிரச்சனைகளுக்கு கூட்டாகத் தீர்வு காண்பதில் எப்போதும் முக்கிய காரணியாக விளங்குகிறது ஜாகோரே மக்களை ஊக்கப்படுத்திச் செயல்பட வைக்கிறது.

இந்த முறை, தடுப்பூசி போடும் முயற்சிகளுக்கு உதவி புரிந்து தினமும் நமக்கு உதவி செய்பவர்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறோம். தடுப்பூசி செலுத்தும் தேவை உள்ளவர்களுக்கான விழிப்புணர்வைப் பரப்புவது, இது தொடர்பான கல்வி மற்றும் டிப்ஸ்களை அளிப்பது, மக்களை ஊக்கப்படுத்தும் ஆர்வலர்களுடன் கூட்டு சேர்வது, இறுதியாக மற்றவர்களும் இதே போன்ற செயல்பாடுகள் மேற்கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில் உறுதிமொழியை எடுத்துக்கொள்வது உள்ளிட்டவை இம்முயற்சியில் அடங்கும். இந்த முயற்சியின் மூலமாக, தடுப்பூசி போடும் திட்டத்தைச் செயல்படுத்துவதில், எங்களால் முடிந்த அளவுக்கு தேசத்துடன் துணை நிற்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

ஜாகோரே முந்தைய பதிப்புகள் வெற்றி பெற்றது போன்று, ‘அனைவருக்கும் தடுப்பூசி’  எனும் குறிக்கோளை அடையும் வகையில் அரசு நிர்வாகத்தின் தற்போதைய முயற்சிகளைப் பூர்த்தி செய்வதற்கான வினையூக்கி தளமாவதை நோக்கமாகக் கொண்டுள்ளது ‘இஸ் பார் சப்கேலியே ஜாகோரே’ முயற்சி.