அரசுப் பணியில் தமிழர்களுக்கு முன்னுரிமை – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு நடைபெறும் 16-வது பேரவையின் முதல் கூட்டத்தை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைத்தார்.

இவர் பேசுகையில், கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளயும் தற்போது பொறுப்பேற்றுள்ள அரசு எடுக்கும்.

திவர ஆக்ஸிஜன் வழங்க ரூ.50 கோடியும், மூன்றாவது அலை முன்னேற்பாடு நடவடிக்கைக்கு ரூ.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும்.

மாநிலத்தின் பல அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சேமிப்பும், உற்பத்தி திறனும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்த புதிய சட்டம் இயற்றப்படும்.

முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், டாக்டர் எஸ்.நாராயணன் ஆகியோர் குழுவில் இருப்பார்கள்.

திவர ஆக்சிஜன் வழங்க ரூ.50 கோடியும், மூன்றாவது அலை முன்னேற்பாடு நடவடிக்கைக்கு ரூ.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும்.மாநிலத்தின் பல அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சேமிப்பும், உற்பத்தி திறனும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.