இசையும் யோகாவும், மனமும் மனிதனும்

ஜூன் 21 உலக இசை தினம், சர்வதேச யோகா தினமாக கொண்டப்படுகிறது. இசையும் யோகாவும் ஒரு மனிதனுக்கு உளவியல் மற்றும் உடல் ரீதியிலானஆரோக்கியத்தை கொடுக்கிறது.

யோகாவால் நமக்கு கிடைக்கும் பலன்கள் :

முறையாக யோகா செய்வதினால் உடல் நலத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மரணத்தை தள்ளிப் போடுகிறது. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.

மனஅழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது , மேலும் தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, மனஒருமைப்பாட்டை போன்றவை வளர்க்க முடியும். மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த முடியும். மனநோய்களான மனஇறுக்கம், அபரிமித உணர்வுகள், வன்முறை உணர்வுகள், பயம் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும். இதை செய்து கொண்டிருந்தவர் இதனை நிறுத்தினாலும் எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இருப்பினும் இதனை தொடர்வது உடலுக்கும் மனதிற்கும் நல்லது.

இசையால் நமக்கு கிடைக்கும் பலன்கள் :

இசை மனித வாழ்வில் பிரிக்க முடியாத பெரும் வரமாக உள்ளது. பிறந்த குழந்தைக்கு தாலாட்டு, இறந்தவருக்கு ஒப்பாரி என இசை நமது உயிர் உருவாவது முதல் பிரிந்து பிணமாகும் வரை நம்மை தொடர்கிறது.

நல்லுணர்வை ஏற்படுத்தும் சத்தம் தான் இசை. இது வெறும் இசையாக இருந்தாலும் இதனோடு சில வரிகள் இணைந்தாலும் நம்மை மயக்கும் வல்லமை கொண்டது. இசைக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இசை ஜாம்பவங்கள் வந்துள்ளனர். எம்.எஸ்.வி. முதல் ரகுமான் வரை ஒவ்வொருவரின் இசை முறை மாறினாலும், இசை மாறவில்லை.

இசையும் ஒரு போதை என்பதால் இதற்கும் பலர் அடிமையாக உள்ளனர். இந்த இசையை குறைவில்லாமல் சினிமா வழங்கிவருவதால் இசை ஒவ்வொருவரின் தனிமனித வாழ்விலும் ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது. தனக்கு பிடித்த இசையை ஒரு 15 நிமிடங்கள் கேட்டால் அவர் உணர்ச்சியின் உச்சத்தை தொட்டிருப்பார். இதுமட்டுமில்லாமல் இசை மன அழுத்ததை குறைக்கும், தூக்கத்தை அதிகரிக்கும், பேச்சு திறமையை அதிகரிக்கும், அறிவாற்றலை பெருக்கும். மனம் ஆரோக்கியமாக இருந்தாலே ஆயுள் கூடுமல்லவா.

யோகாவில் உடல் நலத்தை பெறுவோம், இசையால் மன நலத்தை பெறுவோம் மரணத்தையும் வென்று மகிழ்ச்சியாக வாழ்வோம்.