இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய மக்கள்

கோவையில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இன்று இரண்டாம் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. தினமும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த போதிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது.

அதே நேரத்தில் முதல் தவணை தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இரண்டாம் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது. கோவையில் இன்று அனைத்து தடுப்பூசி மையங்களிலும் இரண்டாம் தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மையங்களிலும் தலா 190 என்ற எண்ணிக்கையில் மொத்தம் 6 ஆயிரத்து 840 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.