ஏழை மக்களுக்கு இலவச காலை உணவு

சூலூர் அறிவுசார் சான்றோர் கல்வி அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி சூலூர் பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் மதியழகன் நகர் பகுதிகளில் (06.06.2021) ஞாயிற்றுக்கிழமை முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் வரை தினந்தோறும் ஏழை மக்கள் 1200 நபர்களுக்கு காலை உணவை அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அவர்கள் பத்திரிக்கை செய்தியில், சூலூர் அறிவுசார் சான்றோர் கல்வி அறக்கட்டளை சார்பில் இதன் தலைவர் குமரவேல், செயலாளர் உதயகுமார், பொருளாளர் செந்தில்குமார், அறங்காவலர்கள் ரகுநாத், ஆறுமுகம், தன்னார்வலர்கள் சுப்பிரமணியம், தாமோதரன், சக்திவேல், தங்கவேல், சரவணன், விஜயகுமார், வருண், நவநீத கிருஷ்ணன், ஜீவா, தினேஷ், குமரேசன், முருகன், கிருஷ்ணா, பழனி, பிரகாஷ், சக்திமோகன் ஆகியோர் இணைந்து இதனை செய்து வருகின்றனர். இந்நிகழ்வு ஊரடங்கு தளர்த்தப்படும் வரை தொடரும் என்று அறக்கட்டளையின் நிர்வாகக்குழு மற்றும் அறங்காவலர் குழுவின் சார்பாக தெரிவித்துள்ளனர்.