மின்மயானத்திலிருந்து வெளியாகும் கரும் புகை

கோவை ஆத்துப்பாலம் மின்மயானத்தில் இருந்து வெளியாகும் கரும் புகையால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கோவையில் தினமும் கொரோனா தொற்றினால் 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படி பாதிக்கப்படுபவர்களில் கோவை அரசு மருத்துவமனை, இ எஸ் ஐ மருத்துவமனை, மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் அதிகரிக்கும் உயிர்பலிகளால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் சிக்கல்கள் எழுந்து வருகிறது.

ஆத்துப்பாலத்தில் உள்ள மின்மயானத்தில் பிரேதத்தை எரிப்பதால் அப்பகுதியில் புகைமூட்டம் காணப்படுகிறது. மேலும் குழாய் மூலம் மேலே உயரத்தில் போகவேண்டிய புகைகள் கீழே பரவி குடியிருப்புகளுக்குள் செல்வதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர். ஆகவே எரியூட்டியை விரைவாக சரி செய்து பொதுமக்களின் அச்சத்தை தீர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.