மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வேண்டும் – தமிழக முதல்வர்

முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை வழங்கப்படுவது தொடர்பான ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (25.5.2021) நடைபெற்றது.

பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தொடர்புடைய துறைகள் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறியுறுத்தியதோடு, நகர்ப்புறங்களில் வழங்கப்படும் இந்த சேவை கிராமப்புறங்களிலும் வழங்கப்படுவதை கட்டாயம் உறுதி செய்யவேண்டும் என உத்தரவிட்டார்.

பொதுமக்களின் வசதிக்காக அடுத்து வரும் நாட்களுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் போதுமான அளவில் தொடர்ந்து நியாமான விலையில் கிடைத்திட தொடர்புடைய துறைகள் நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்.