அரசு மருத்துவமனையில் தேங்கி நிற்கும் கழிவு நீர்

கோவை அரசு மருத்துவமனை முதல் நுழைவாயிலில் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அங்கு கடந்த சில தினங்களாகவே சாக்கடை நீர் வெளியேறி வருவதாக குற்றச்சாட்டுகளை எழுந்த நிலையில் அதனை மருத்துவமனை நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று சாக்கடை நீர் அதிக அளவு வெளியேறியதால் அங்கு நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் நோயாளிகளும் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மக்களின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தற்காலிகமாக நடை பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது எனினும் தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் அங்கு துர்நாற்றம் வீசுவதாகவும் கொசுக்கள் அதிகரிப்பதாகவும், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் இதனை உடனடியாக சரி செய்து தரும்படியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.