உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும் – கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் ”உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்” எனும் தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம் (08.05.2021)நடைபெற்றது. நிகழ்விற்கு முதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக மதுரை தியாகராஜா கல்லூரி, தமிழ்ப்பேராசிரியர் சு. காந்திதுரை கலந்து கொண்டு,உரை நடையின் வகைகள் மற்றும் ஆழமான கருத்தினை சுருங்கக் கூற அமைக்கப்பட்டதே செய்யுள் என்றும் உலக நலன் கருதி சுருங்கக் கூறிய செய்யுளின் பொருள் விளங்கக் கூற உருவானதே உரை நடை என்றும் கூறினார்.

தர்க்க அடிப்படையில் கலந்துரையாட தோற்றுவிக்கப்பட்டதே உரை நடை என்பதை சிலப்பதிகாரம், திருக்குறள் எனும் தமிழ் இலக்கிய நூல்களில் உள்ள உரையிடையிட்ட பாட்டிடைச் செய்யுள் பகுதிக்கும் விளக்கம் கூறுவதே உரைநடை என்றும் மேலும், கால அடிப்படையில் உரை நடை வளர்ச்சியை விரிவாகக் கூறினார்.

நிகழ்வில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.