6 அடி இடைவெளியும் தாண்டி சில மணி நேரம் காற்றில் உயிர்ப்புடன் இருக்கும்

கொரோனா வைரசிடமிருந்து பாதுகாக்க 6 அடி இடைவெளி அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. ஆனால், காற்றில் பரவும் கொரோனா வைரஸ் 6 அடிக்கும் அதிகமாக செல்லக் கூடியது என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து 6 அடி தூரத்தை தாண்டி கொரோனா வைரஸ் காற்றில் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது என்றும், இது 15 நிமிடம் முதல் சில மணி நேரம் வரை காற்றில் உயிர்ப்புடன் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் அவ்விடத்தை தாண்டி செல்பவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.