பொது முடக்கம் தொற்று பரவலை தடுக்குமா?

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை உண்மையில் யாரும் எதிர்பார்காத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு, பொதுமக்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு என பலவற்றிக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

டெல்லி, உத்திரபிரதேசம் போன்ற வடமாநிலங்களில் நிலைமை இதைவிட மோசமாகி வருகிறது. ஆக்சிஜனுக்கு விலை கொடுத்து வாங்கும் நிலையே மோசமானது. அதிலும் என்ன விலை கொடுத்தாலும் அது கிடைக்கவில்லை என்ற நிலை மிகவும் மோசமானது.

இந்தியாவில் முதல் அலை தாக்கிய பொழுது பெரிதளவில் தாக்கம்  இல்லை, மக்களிடையே விழிப்புணர்வும் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்பொழுது இந்தியாவில் உருவாகியுள்ள இரண்டாம் அலையின் தாக்கம் மிகபெரிய அளவில் பாதிப்பை எற்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில்  தற்பொழுது வரை இத்தகைய நிலை ஏற்படவில்லை என்றாலும், அந்த நிலையை அடைய வெகுநாட்கள் ஆகாது. நாம் விழிப்புணர்வுடன் இருந்தால் இதனை நம்மால் தவிர்க முடியும். அது மட்டுமல்ல மேலும், பொதுமுடக்கத்தின் மூலம் இந்த தொற்று பரவல் சங்கிலியை உடைத்தால் தான் இதிலிருந்து தப்பமுடியும்.

இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், ‛‛மே, ஜூன் மாதங்களில் பொது முடக்கத்தை அறிவித்து விட்டு ஒரு நாளைக்கு 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டாலும் 18 கோடி பேரை எளிதாக தொட்டுவிடலாம். பொது முடக்கத்தின் மூலம் வைரஸ் பரவல் செயினை அறுத்துவிட்டு 45 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு விட்டால் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அதுமட்டுமல்ல, மே, ஜூனில் கடும் வெப்பம் இருக்கும். சுற்றுலா தவிர அப்போது மற்ற வியாபாரங்கள் மந்தமாகவே இருக்கும்.பொது முடக்கத்தால் பள்ளி, கல்லூரிகளும் மூடியிருக்கும். எனவே மக்களுக்கு பெரிய அளவில் வாழ்வாதார பாதிப்பு இருக்காது. ஜூலைக்குப் பிறகு நிலைமை சீரடைய வாய்ப்பிருக்கிறது,” என்றனர்.

தகவல் :தினமலர்