கே.பி.ஆர் கல்லூரியில் கூகுள் ஏப்ஸ் குறித்த இணையவழி கருத்தரங்கம்

கூகுள் ஏப்ஸ் என்னும் தலைப்பில் கோவை கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரின் கணிணி அறிவியல் துறையின் சார்பாக மாணவர் மேம்பாட்டு வகுப்பு சனிக்கிழமை  (24.4.2021)நடைபெற்றது.

நிகழ்வின் தலைமை உரையினை, கல்லூரி முதல்வர் பாலுசாமி வழங்கிச் சிறப்பித்தார்.

விழாவின் சிறப்பு விருந்தினராக, சென்னை விப்ரோ சீனியர் சர்விஸ் மேனேஜர் ராமகிருஷ்னன் கலந்துகொண்டு, கூகிள் இன்றைய சூழலில் மாணவர்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது. மாணவர்கள், கணினி வாயிலாக இணைய வழியில்தான் அனைத்தையும் நிகழ்த்த முடியும் என்று கூறினார்.

தான் சாதிக்க நினைப்பது இணையத்தின் துணைகொண்டு சாதிப்பது மிகவும் எளிது என்றும், Google Forms,Seets Documents, Calendar Meet ஆகிய பயன்பாடுகளை செயல்முறை விளக்ககத்துடன் கூறியதோடு அதை முறைப்படுத்தித் தொடக்கம் முதலே செய்து முறையாக வகைப்படுத்த வேண்டும் என்றும், இன்றைய கணிப்பொறி உலகில் ஒவ்வொரு நாளும் கூகிள் முலமாக நிகழ்வுகளை எப்படி வெற்றியாக மாற்றி கையாள்வது என்றும், இன்றைய மாணவர்கள் தங்களின் எண்ணங்களை Google மூலமாகதான் வெற்றியை அடையசெய்ய முடியும் என்பதை தமது உரையில் பதிவுசெய்தார்கள்.

மேலும் பயிற்சியும், தரவுகளை சேகரிப்பது, சான்றிதழ்களை வடிவமைப்பது, தரவுகளின் மூலம் வினாடி-வினா போன்ற செயல்பாடுகளை நடத்துவது எப்படியென்றும் கூறுகின்றனர்கள் கூகிள் ஆப்ஸின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கமும் பயிற்சிகளும் அளித்தார்.

விழாவில் துறை சார் பேராசிரியர்கள், மற்றும் மாணவர்கள் என  140க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.