அன்பான ஒருவரின் இழப்பை எப்படி எதிர்கொள்ளவது?

நமக்குப் பிரியமான ஒருவரை இழந்த துயரத்தை நாம் எப்படி எதிர்கொள்வது என்று பிரபல எழுத்தாளர் அமிஷ் திரிபாதி சத்குருவிடம் கேட்கிறார்.

அமிஷ் திரிபாதி: என் கேள்வி துயரம் பற்றியது. மகிழ்ச்சி-துயரம் இரண்டையும் நாம் சமநிலையுடன், ஒரேவிதமாக, பற்றுதலின்றி கையாளவேண்டும் என்று நம் முன்னோர்களின் தத்துவங்கள் சொல்கின்றன. ஆனால் தாங்கமுடியாத துயரத்தை எதிர்கொண்டால் என்ன செய்வது? மிகவும் நேசிக்கும் ஒருவரை இழந்தால் என்னசெய்வது? ஒருவரை இழப்பதால் ஏற்படும் துயரத்தை எப்படி எதிர்கொள்ள?

சத்குரு: இது எவருடைய இழப்பையும் குறைவாக சொல்வதற்கில்லை, ஆனால் துயரம் இன்னொருவர் இறந்தது பற்றியதல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், துயரம் எப்போதுமே இழப்பால் வருவது, அதாவது நாம் எதையோ இழந்துவிட்டோம். மனிதர்களால் உடமைகள், பதவிகள், அல்லது வேலையின் இழப்பாலும் கூட துயரமடைய முடியும். அடிப்படையில் துயரம் என்பது தனிமனிதர்கள் ஏதோவொன்றை இழப்பதால் வருவது. மனிதர்கள் என்று வரும்போது, அவர்களை மரணத்திடம் இழக்க நேர்ந்தால், அவர்களுக்கு மாற்று கிடையாது என்பதுதான் இந்த இழைப்பை தனித்துவமாக்குகிறது. உடமைகள், பதவிகள், பணம், சொத்து ஆகியவற்றை இழந்தால் மாற்று கண்டுபிடித்துவிடலாம், ஆனால் ஒரு மனிதரை இழந்தால் அவரை ஈடுகட்ட முடியாது.

அதனால் அந்த இழப்பு ஏற்படுத்தும் துயரம், மற்ற இழப்புகள் ஏற்படுத்துவதைவிட ஆழமானதாக இருக்கிறது.

நமது ஆளுமைத்தன்மையை நாம் துண்டுதுண்டாக சேர்த்து உருவாக்கியிருப்பதால்தான் நமக்கு இப்படி நேர்கிறது. “நாம் யாராக இருக்கிறோம்“ என்பது, நாம் என்ன உடமை வைத்திருக்கிறோம், என்ன உறவுகள் வைத்திருக்கிறோம், நம் வாழ்க்கையில் யார்யார் இருக்கிறார்கள் என்பதை சார்த்திருக்கிறது.

இதில் ஏதோவொன்று இல்லாமல் போனால், நம் ஆளுமைத்தன்மையில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது, அதனால்தான் நாம் வேதனைப்படுகிறோம்.

நம் வாழ்க்கையை ஏதோவொன்று கொண்டு நிரப்புவதாக நம் உறவுகள் இல்லாதிருப்பது மிகவும் முக்கியம். உறவுகள் நமது முழுமையின் அடிப்படையிலிருந்தே உருவாக வேண்டும்.

ஏதோவொரு உறவு, உங்களை முழுமையாக்கிக் கொள்ள பயன்படுத்தினால், அதை இழக்கும்போது வெறுமையாவீர்கள். ஆனால் உங்களின் முழுமையை பகிர்ந்துகொள்ள உறவுகள் உருவாக்கினால், துயரம் என்பதே இருக்காது.

நமக்குப் பிரியமான ஒருவரை இழக்கும்போது இது எதுவும் வேலைசெய்யாமல் போகலாம், இது ஒருவரின் இழப்பை சிறுமைப்படுத்துவதாகவும் தெரியலாம்.

அதனால் இந்த இயல்பை நம் வாழ்க்கை முழுவதும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும் – நாம் என்ன வைத்திருக்கிறோம் என்பது நாம் யாராக இருக்கிறோம் என்பதை நிர்ணயிக்கக்கூடாது. நாம் யாராக இருக்கிறோம் என்பதுதான் நம் வாழ்க்கையில் என்ன வைத்திருக்கிறோம் என்பதை நிர்ணயிக்க வேண்டும். இது ஒவ்வொரு மனிதருக்கும் நிகழவேண்டும். ஆன்மீக செயல்முறை என்றால் இதுதான்.