பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய என்எஸ்125 அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது என்எஸ் சீரிசில் குறைந்த விலை மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. பஜாஜ் என்எஸ் சிரிஸில் இதுவரை 160 மற்றும் 200 சிசி பைக்குகள் இருந்தது, இதனுடன் தற்போது 125சிசி-யையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.93,690, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய என்எஸ்125 மாடலில் 12 லிட்டர் பியூவல் டேன்க், ட்வின் எல்இடி டெயில் லேம்ப்கள், ஸ்போர்ட் அம்சங்களுக்கு ஏற்ற வடிவமைப்பு கொண்டிருக்கிறது. 124சிசி, ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 12 பிஹெச்பி பவர், 11 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது 144 கிலோ எடை கொண்டுள்ளது. பஜாஜ் என்எஸ்125 மாடல் – பியெரி ஆரஞ்சு,  பீச் புளூ, பர்ன்ட் ரெட் மற்றும் பியூட்டர் கிரே என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. பேட்ஜிங் மற்றும் புதிய புளூ நிறம், அலாய் வீல்களில் மெட்டாலிக் கிரே நிறம் தவிர புது மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.