அரசு மருத்துவமனை வரலாற்றில் முதல் முறையாக பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை!

கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை வரலாற்றில் முதல் முறையாக இருமுறை மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிக்கு பலூன் அஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா பேசுகையில், கோவையை சேர்ந்த  55 வயது நோயாளி ஒருவர் கடந்த  2018 ஆம் ஆண்டு மாரடைப்பால் பாதிக்கபட்டு ஸ்டேன்ட் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் மற்றொருமுறை மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருந்து பூசப்பட்ட பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி எனப்படும் ( DRUG COATED BALOON ) சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாரன நோயாளிக்கு மற்றொரு ஸ்டெண்ட் வைக்காமல் –  சிகிச்சை அளிப்பது தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இதுவே முதல்முறையாக ஆகும்.

சிகிச்சையின் மூலமாக நோயாளி பூரண குணமடைந்துள்ளார்.  இருதயவியல் துறைதலைவர் முனுசாமி,  மருத்துவர் நம்பிராஜன் குழுவினர் இந்த சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு பெருமை சேர்த்துள்ளனர். இவ்வாறு நிர்மலா தெரிவித்தார்.