கே.பி.ஆர் கல்லூரியில் வினாடி வினா போட்டி

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, ஆங்கிலத் துறையின் சார்பில் ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் பிறந்தநாளை நினைவு கூறும் விதத்தில் இ-வினாடி வினா இன்று (15.4.2021) நடைபெற்றது.

வேர்ட்ஸ்வொர்த்தின் வாழ்க்கை வரலாறு, முக்கியமான படைப்புகள், மேற்கோள்கள் மற்றும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட இருபது கேள்விகளின் தொகுப்பு உருவாக்கப்பட்டது.

இவ்வினாடி வினாவில் 2,705 நபர்கள்   பங்கேற்றனர்.  இயற்கைக் கவிஞர், வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் ஆங்கில இலக்கியம் காதல் யுகத்தில் இலக்கியப் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வைக் கொண்டுவருவதும், அதன் மூலம் இயற்கையின் மதிப்பைப் பாராட்டுவதும் வினாடி வினாவை நடத்துவதன் நோக்கமாக இருந்தது.

இந்த வினாடி வினாவில் இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு பல்கலைக்கழகங்களின் துறை சார்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியார்கள், மற்றும் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.