சூடிக்கொடுத்த சுடர்க்கொடி- இணையவழி கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் தமிழ்த் துறையின் சார்பில் “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” எனும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் இன்று (15.04.2021) நடைபெற்றது.

இக்கருதரங்கத்திற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மும்பை நவி தமிழ்ச்சங்கத்தின் செயலர் மற்றும் வழக்குரைஞர் ராஜஸ்ரீ நாகராஜன்  கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கும் ஆண்டாள் நாச்சியார் பாடியருளிய நாச்சியார் திருமொழி பாசுரங்களை எடுத்துரைத்தார். திருமால் தன்னை மணம் செய்து கொள்ளும் விதத்தில் கனவு கண்ட பாங்கினை ஆண்டாள் தனது தோழிக்கு எடுத்துக்கூறிய திறத்தை விளக்கினார்.

உலகியல் வாழ்வோடு கலந்து இருக்கக்கூடிய பண்பாடு, பழக்கவழக்கம், திருமண சீர்வரிசை, திருமணச் சடங்கு முறைகள் முதலியனவற்றை எடுத்துரைத்து நிறைவு செய்தார்.

இந்த இணைய வழி கருத்தரங்கில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.