உயிரினங்களில் “Hero” ஆரோக்கியத்தில் “Zero”

வாழ்வியல் யோகம் – தொடர் 1

யான் பெற்ற யோக இன்பத்தை பெறுக வையகம் எண்ணி இன்று உங்கள் கரங்களில் தவழும் கோவை மெயில் பத்திரிக்கையில் எமது கனவை எண்ணங்களாக்கி, எண்ணங்களை சொல்லாக்கி, சொல்லை செயலாக்கி, செயலை சமூகத்திற்காக படைக்கின்றேன்.

எத்தனை கோடி நன்மை செய்தான் இறைவன். நீ அதனை உணர்ந்தாயா மனிதா! என்று கேட்கையில் ஒவ்வொரு மனிதரும் தரும் பதில் பல பல. இது சரியா? தவறான பதில். நன்மைகள் 100 ஆக இருக்கும், தீமைகள் 2 (அ) 3 ஆக இருக்கும். ஆனால் மிக பெரியதாக நினைப்பது தீமையைத் தான். நன்மைகளை அல்ல. இதனை யோசிப்பீர்!.

யோகா…

யோகம் என்பது பிரபஞ்சத்தின் இயக்க நிலை. இயற்கையின் செயல்பாடு, ஜீவன்களின் செயல்பாடு, மனிதன் தன்னை அறியும் நிலை, மெய்ஞான கல்வி, மதம் – இனம் – மொழி இவைகளை கடந்த உயர்ந்த ஒழுக்க மனித குல வாழ்க்கை முறையாகும். கலை மற்றும் அறிவியல் சார்ந்த பயிற்சி. உடல் – மனம் – ஆன்மா மற்றும் சமூகம் ஆரோக்கியம் பெற உதவும் மெய்ஞான கல்வியாகும். மனித இனம் நோய் இன்றி வாழ உதவுகின்ற உயர்ந்த ஒழுக்க கல்வி மற்றும் மருத்துவம் எனில் அது மிகையாகார். செய்யும் செயலை செம்மையாக செய்வது யோகம்என்று கூறலாம்.

பக்தியில் நாம்

மனித இனத்தில் ஒவ்வொரு இனமும் இறைவனை வழிபாடு செய்யும் ஒரு செயல்முறை தான் பக்தி. இதில் மதம் வாரியாக இறைவனுக்கு பெயர்களும். வழிபடும் முறைகளும் வேறுபடுகிறது. இதில் எது சரி! எது தவறு! என்று எந்த மதத்தினருக்கும் – இனத்தவருக்கும் புரியாத புதிர்.  இருப்பினும், மனிதர்கள் தன்னுடைய மூதாதையர்கள் (அ) குருமார்கள் காட்டிய நிலையை நம்பிக்கையோடு செயல்படுத்தி இறை நிலையை உணர்கிறார்கள். இதில் இறைவனை (அ) இறை சக்தியை, இறை செயலை (அ) படைப்பை முற்றிலும் அறிந்தவர்கள் யார்? எனில் சிலரே! புல் வழிபாடுகளோடு நின்று விட்டார்கள். இதுவல்ல பக்தியோகம் விரிவாக பக்தி யோகத்தில் அறிவோம்.

ஞானத்தில் நாம்…?

முக்காலத்தையும் அறிந்தவர்கள் சித்தர்களும், ஞானிகளும் தன்னை அறிகினில் தனக்கு ஒரு கேடு இல்லை என்று கூறுகின்றனர். திருமந்திரத்தில் திருமூலர் கூறும் பாடல்;

என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்

என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்

என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது

எண்ணை விட்டு என்னை உசாவுகின்றேனே”.

என்று தன்னை அறிய முற்பட வேண்டும் என்கிறார். மேலும் திருவள்ளுவர் குறளில் இவ்வாறு கூறுகிறார். கற்றதினால் பயனென்கொல் என்னும் குறளில் தான் எவ்வளவு படித்திருந்தாலும் தன்னுள் இருக்கும் இறை சக்தியை உணரவில்லை எனில் நாம் பெற்ற கல்வியினால் பயன் இல்லை என்கிறார்.

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும், எத்தனை விஞ்ஞான வளர்ச்சி பெற்றாலும் மனிதன் இன்னும் மெய்ஞானத்தை பெறாதது ஏன்? பக்தி என்ற பெயரில் பல வியாபாரம்! யோகம் என்ற பெயரில் பல ஏமாற்றுகள்! ஆரோக்கியம் என்ற பெயரில் பல் கலாச்சாரம்! இவைகளிலிருந்து எப்பொழுதுதான் மனிதா நீ விழிப்பாய்? ஞானம் பெறுவாய்? அறிவீர் ஞானம் பெறுவாய்? அறிவீர் ஞான யோகத் தொடரில்.

மனித ஆரோக்கியம் எங்கே…?

உலகில் உள்ள 84 லட்சத்து ஜீவன்களில் மனிதன் மட்டும் ஏன் ஆரோக்கியத்தில் Zeroவாக உள்ளான். உயிரினங்களில் Heroவாக இருக்கிறவன் இப்படி வாழ்க்கையில் பாதியை மருத்துவமனையில் கடந்துறங்குவது சரியா? வீட்டில் உறங்கும் மனிதர்களை விட மருத்துவமனையில் உறங்கும் நபர்கள் அனேகர். 120 ஆண்டுகள் மனிதனுக்கு ஆயுட்காலம் இதனை ஏன் வாழ்ந்துபார்க்க இயலவில்லை. எல்லா சக்தியும் நம் முன்னே இருக்கிறது. இதனை அறிய யோகத்தை அறியாரோ?….

எது மருந்து…?

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றிவுணின்”, குறள் வேந்தன் கூறும் கூற்று ; மருந்து உணவுதான்; என்கிறார்.  ஆனால் நோய்க்கு மருத்துவரை நாடி செல்கையில் மருந்துகளைத்தான் (1 வழ 10) மாத்திதைகளை உணவாக யாத்திரைக்கு வழி. மருந்தை உணவாக கொள்பவர்  பிறவி பெருங்கடலை நீந்தார். உணவை மருந்தாக கொள்பவர் பிறவி பெருங்கடலை எளிதாக நீந்துவர். உயர் உள்ள உணவே உயிர்காக்கும் மருந்து. நாம் உண்ணும் உணவில் நம் உடலுக்கு தேவையான 6 தாதுக்கள் அதாவது 6 சுவைகள் சரியாக எடுத்துக்கொண்டால் ஏழாவது தாது என்னும் மூனை சீராக வேளை செய்யும் என்பதை அறிந்து கொள்ள உணவு யோகத் தொடரில் காண்போம்.

நிறைவாக…

 

ஒரு மனிதன் தான் செய்ய வேண்டிய அன்றாட வாழ்வியல் யோகத்தை ஒவ்வொரு தொடராக இனி வரும் வாரங்களில் பார்ப்போம்.