மலைவாழ் கிராமங்களில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு : திமுக வேட்பாளர் பையா கிருஷ்ணன் வாக்குறுதி

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை மாநகர் மேற்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக தி.மு.க வேட்பாளராக போட்டியிடுகின்ற பையா ஆர்.கிருஷ்ணன் சனிக்கிழமை அன்று (27.03.2021) பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியத்தின், வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட, ஆனைகட்டி, சேம்புக்கரை, காட்டுச்சாலை, தூம்மனூர், கொண்டனூர், கொண்டனூர்புதூர், ஆலமரமேடு, பனப்பள்ளி, வடக்காலூர், தெக்காலூர், தூவைபதி, ஜம்புகண்டி ஆகிய பல்வேறு மலைவாழ் கிராமங்களில் பிரச்சாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

அப்போது பேசிய கழக வேட்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன், தி.மு.க ஆட்சி அமைந்து, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதும் உங்களது கிராமங்களுக்கு தார்சாலை வசதி, வீடு இல்லாதவர்களுக்கு வீடு, யானை பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது, குடிநீர் வசதி, தடுப்பணைகள், மின்சார வசதிகள், தரைப்பாலங்கள் போன்ற அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.