கேபிஆர் கல்லூரியில் வேளாண்மை குறித்த கருத்தரங்கு

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மேலாண்மைத்துறை மிலிஸ் (MILES) 2021 மற்றும் இன்னோவேஷன் அண்ட் என்ரிபிரிணோர்ஷிப் டெவெலப்மென்ட் செல் (INNOVATION AND ENTREPRENEURSHIP DEVELOPMENT CELL) இணைந்து மாணவர்களுக்கான “வேளான் கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர்” குறித்த கருத்தரங்கினை (9.3.2021) நடத்தியது. இக்கருத்தரங்கத்திற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி  தலைமை தாங்கிச் சிறப்பித்தார். சிறப்புவிருந்தினராக கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டப்படிப்பின் மேனாள் முதன்மையர் மோகன் கலந்துகொண்டு வேளாண் கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர்கள் குறித்த ஒரு வெற்றிக் கதையினைப் பொருண்மையாகக் கொண்டு சிறப்புரை வழங்கினார். இந்திய நாடு வேளாண் துறையில் பல வெற்றிகளைக் கண்டறிந்த பொழுதிலும் வருங்காலத்தில் உள்ள மக்கள் தொகைக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு அதிக அளவில் தேவை உள்ளது என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.

பொருளியல் முன்னேற்றத்தின் வரலாற்றை அலசிப்பார்த்தால் நாட்டின் வருவாயில் வேளாண்மையின் பங்கு குறைந்து கொண்டே வருகிறது என்பதை எடுத்துக் கூறி மாணவர்கள் அதிகப்படியாக வேளாண் உற்பத்தியாளர்களாக மாறுவதற்கு உண்டான வழிமுறைகளையும் வேலை வாய்ப்பினையும் எடுத்துரைத்தார். பால் பொருட்கள் தொடர்புடைய வெண்ணெய், நெய், பாலாடை, கோவா போன்ற பொருட்களைப் பதனீட்டு முறையில் அதிக அளவில் உற்பத்தி செய்து உள்நாடு மற்றும் வெளிநாடு சந்தைகளில் விற்பனை செய்வதற்கு பல தொழில் வாய்ப்புகள் உள்ளது என்றும் மாணவர்களுக்கு வேளாண் தொடர்பான வேலை வாய்ப்பு நிலைகளை விரிவாக எடுத்துரைத்து நிறைவு செய்தார்.