சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை: மாலுமிச்சப்பட்டியில் உள்ள மெஸ்ஸர் கட்டிங் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் உயிர் டிரஸ்ட் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, 11ம் தேதி வியாழக்கிழமையன்று மெஸ்ஸர் கட்டிங் இந்தியா நிறுவனத்தின் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாளர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார். பின்னர் நிர்வாக இயக்குநர் மணி சிறப்புரை வழங்கினார். உயிர் டிரஸ்ட் சார்பாக சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி வழிமொழியப்பட்டது. முன்னதாக கங்கா மருத்துவமனை மருத்துவர் கண்ணன் பலராமன் மெஸ்ஸர் கட்டிங் தொழிலாளர்களுக்கு முதலுதவி மற்றும் சாலை விபத்துகளை கையாழும் விதம் தொடர்பாக விரிவான விளக்கங்களை வழங்கியதோடு தொழிலாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். இந்நிகழ்ச்சியில் மெஸ்ஸர் கட்டிங் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள், உயிர் டிரஸ்ட் நிர்வாகிகள், கங்கா மருத்துவமனை சமூகநல பணியாளர்கள் கலந்துகொண்டனர்.