உலக வானொலி தின சிறப்பு கருத்தரங்கு

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி காட்சி தொடர்பியல் துறை சார்பில் உலக வானொலி தினத்தை முன்னிட்டு இணையவழி கருத்தரங்கு இன்று (13.2.2021) நடைபெற்றது. இந்நிகழ்வில் காமென்வெல்த் எடுகேஷ்னல் மீடியா சென்டர் ஃபார் ஆசியாவின் (CEMCA) முன்னாள் இயக்குநர் ஸ்ரீதர் கலந்துகொண்டு, நம் அன்றாட வாழ்வில் வானொலியின் பயன்கள் மற்றும் இணைய வானொலியின் சிறப்புக்கள் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு வானொலி தினத்தை கொண்டாடினர்.