கேபிஆர் கலை கல்லூரியில் பாரதி விழா

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் பைந்தமிழ் மன்றம் நடத்திய “பாரதி விழா 2020” நிகழ்வு கல்லூரியின் வீணா அரங்கில் கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கிச் சிறப்பித்தார்கள். விழாவின் சிறப்பு விருந்தினராக சூழலியல் அறிஞர் கோவைசதாசிவம் கலந்து கொண்டு பேசுகையில், “எல்லா உயிர்களும் இன்பம் எய்துக” என்னும் பொருண்மையில் பாரதியின் வரிகளை மாணவர்களுக்கு மனதில் பதியும் வண்ணமும். பாரதியின் கவிதைகளோடு ஒப்புமைப்படுத்தியும் விளக்கினார்.

இன்றைய சூழலில் சமுதாயத்தில் ஏற்படுகின்ற மாசுகளையும் அதை தவிர்க்கும் முறைகள் பற்றியும் மாணவர்களிடையே எடுத்துரைத்தார். மாணவன் என்பவன் ஒழுக்கம் மற்றும் உயர்ந்த பண்புடையவனாக இருந்தால் மட்டுமே இந்த சமுதாயம் நன்நெறி அடையும். பாரதியின் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு மற்றும் புதிய ஆத்திச்சூடி போன்ற படைப்புகளிலிருந்து சுதந்திரப்போராட்டம், பெண்விடுதலை, தீண்டாமை போன்ற பல்வேறு வேள்விகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்கள். தொடர்ந்து வழக்கறிஞர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் எஸ்.டி.கலைஅமுதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார். பின்னர், பாரதி விழாவினையொட்டி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிப்பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தினார்கள்.