முதல்வருக்கு ராசியான நம்பர் 7

– எண் கணித நிபுணர் கணிப்பு

சென்னை: எடப்பாடி கே பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற நாள் முதல் இன்றைய தினம் வரை அவருக்கு 7ஆம் தேதி ராசியான நாளாக இருக்கிறது. இதற்கான காரணத்தையும் எடப்பாடி பழனிச்சாமியின் குணாதிசயங்களையும் கணித்துள்ளார் எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்.

முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி பெயர் கூட்டுத்தொகை எண் கணிதப்படி 5 வருகிறது. அளப்பறிய எண். பிறந்த நாள் கூட்டுத்தொகை 12/05/1954 பிறந்த நாள் 12 இதை கூட்டினால் 3 வருகிறது இது குருவின் எண். பிறந்த தேதியின் மொத்த கூட்டுத்தொகை 27 அதாவது 9 இது செவ்வாயின் எண். அதிமுக கட்சியின் கூட்டு எண் 7 இது இயல்பாகவே எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக உள்ளது.

அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி சசிகலா சிறைக்கு போனதை அடுத்து முதல்வராக பதவி ஏற்ற நாள்

16/02/2016. இந்த எண்ணின் ராசி காரணமாகவே கடந்த 4 ஆண்டு காலமாக கச்சிதமாக ஆட்சியை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இன்றைய நாளும் 7ஆம் தேதி இயல்பாகவே எடப்பாடி பழனிச்சாமிக்கு ராசியான தினமாக அமைந்து விட்டது.

எடப்பாடி பழனிச்சாமியின் குணாதிசயங்களை பார்த்தால், அவர், தந்திரம் மிக்கவர். கச்சிதமாக காரியம் நகர்த்தி வெற்றி பெறுவதில் கில்லாடி. அடுத்தவர்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் துல்லியமாக எடுப்பார்.

எதை செய்தால் நமக்கு ஆதரவாளராக இருப்பார் என்பதை அறிந்து செயல்படுவார். அமைதியாக இருந்தாலும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர். இவர் என்ன நினைப்பாரோ அதைத்தான் செயல்படுத்துவார்.

பகைவரின் சூழ்ச்சியை அறிந்து அடக்கிவிடுவார். எதையும் ஒன்றுக்கு மூன்று முறை சிந்திப்பார் எடப்பாடி பழனிச்சாமி ராஜ தந்திரத்தோடு செயல்படும் அவர் எந்த சட்டசிக்கலிலும் மாட்டிக்கொள்ள மாட்டார். இன்னும் மிகப்பெரிய நிலையை அடையப்போகிறார் எடப்பாடி பழனிச்சாமி.