கேஎம்சிஎச் இல் இதயத் துடிப்பை சீராக்கும் புதிய தொழில்நுட்பம்

கண்டக்ஷன் சிஸ்டம் பேஸிங் (Conduction System Pacing) என்னும் இதயத் துடிப்பை சீராக்கும் புதிய தொழில் நுட்பத்தைக் கொண்டு ஐந்து நோயாளிகளுக்கு கேஎம்சிஎச் வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளது.

இது குறித்து கேஎம்சிஎச்-யின் இதயத் துடிப்பு மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் லாரன்ஸ் ஜேசுராஜ் கூறியதாவது, இதயத் துடிப்பை சீராக்கும் பேஸ்மேக்கர் (Pacemaker) என்பது ஒரு கணினி போன்று பேட்டரியால் இயங்கும் சிறிய கருவி. இது இதயத் துடிப்பு குறைவாக உள்ளவர்களுக்கு பொருத்தப்படும். இந்தக் கருவி இதயத்தின் மேல் (Atrium) மற்றும்கீழ் (Ventricle) பகுதிகளில் மின் ஒயர்களின் மூலம் இதயத்தை சீராக இயங்கவைக்கிறது. இது இதயத் துடிப்பு குறைவாக உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு குறையும் நேரங்களில் உயிர்காக்கும் கருவியாக இருக்கிறது.

ஆனால் சில நோயாளிகளுக்கு இந்தக் கருவி பொருத்தும் சமயங்களில் இதயத்தின் திறன் நாளடைவில் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதனைத் தவிர்க்கும் விதமாக கேஎம்சிஎச் மருத்துவமனையில் ஐந்து நோயாளிகளுக்கு இதயத்தின் இயற்கையான மின்னோட்டப் பாதையில் பேஸ்மேக்கர் கருவியைப் பொருத்தி கேஎம்சிஎச் மருத்துவர்கள் மிக அரிதான மற்றும் மிகவும் கடினமான அறுவை சிகிச்சையை செய்துள்ளனர்.

இதன் மூலம் இந்த நோயாளிகளின் இதயத் துடிப்பு குறைபாடு சரியாவதுடன் அவர்களின் இதயத்தின் வேலை செய்யும் திறனும் முன்னேற்றம் அடைகிறது. இதனால் இதய மாற்று அறுவை சிகிச்சை போன்ற பொருள் செலவும், சிக்கலும் நிறைந்த அறுவை சிகிச்சைகளை பல நேரங்களில் தவிர்க்க முடியும். இது அவர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்றார்.

கே.எம்.சி.எச்-ன் நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் பழனிச்சாமி கூறியதாவது, மருத்துவத் துறையில் மேற்கத்திய நாடுகளிலுள்ள நோயாளிகளுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய அனைத்து வகைநவீன மருத்துவத்தையும் இங்கே, தமிழகத்தில் புகுத்துவதில் கேஎம்சிஎச் என்றுமே முன்னோடியாக விளங்குகிறது.ஐந்து நோயாளிகளுக்கும்இதயத் துடிப்பு மற்றும் அதன் திறன்மேம்பாடு அடைந்து அறுவை சிகிச்சை முடிந்த இரண்டாவதுநாளே வீடு திரும்பினர். அவர்களின் உடல்நலம் நன்றாகத் தேறிவருகிறது என்றார்.

மேலும் விபரங்களுக்கு: 90433-55553.