வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

தமிழகத்திலும் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி சார்பில் கோவையில் வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

கோவை மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். மக்களிடம் கையெழுத்தை பெற்ற பிறகு இதனை ஆளுநரிடம் சமர்ப்பிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.