அரசினர் தொழிற்பயிற்சி நிலைய தொழில் பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை

மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலும் ஆனைகட்டி (பழங்குடியினர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலும் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளதாகவும் இது முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படியில் நடைபெறவுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஆனைகட்டியில் பழங்குடியினருக்கு தனியாகஇயங்கிவரும் தொழிற்பயிற்சிநிலையத்தில்காலியாகஉள்ள எலெக்ட்ரிசின்,மெக்கானிக் மோட்டார் வேஹிள்,ஃபிட்டர்,ஒயர்மேன்,வெல்டர்ஆகியதொழில்பிரிவில்உள்ள காலியிடங்களைநிரப்பிடவும்,மேட்டுப்பாளையம்சாலையிலுள்ளஅரசினர்தொழிற்பயிற்சிநிலையத்தில் காலியிடங்களை நிரப்பிடவும் 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் தங்களது அசல் சான்றிதழ்களுடன் அக்டோபர் 22 ஆம் தேதி முதல் நடைபெறும் நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ளலாம்.

மிகக்குறைந்த காலியிடங்களே உள்ளதால், மாணவ,மாணவியர்கள் தொழில் பிரிவில் சேர்ந்து பயிற்சி பெற உடனடியாக நேரடி சேர்க்கையில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.