கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மருத்துவப் பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் சானிடைசர்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை கிழக்கு மாநகர் சார்பாக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை பயன்பாட்டிற்கென முகக்கவசங்கள், ஷீல்டுகள் மற்றும் சானிடைசர்கள் வழங்கப்பட்டது.

கொரோனோ வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ அமைப்புகளும் அரசுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை கிழக்கு மாநகர் சார்பாக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக பணி புரியும் வகையில் முக கவசங்கள், ஷீல்டுகள் ,சானிடைசர் திரவங்கள் வழங்கப்பட்டது.

இ.எஸ்.ஐ.மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை கிழக்கு மாநகர தலைவர் ஆர்.எஸ்.தனபால் மருத்துவமனை டீன் நிர்மலாவிடம் இதனை வழங்கினார். இதில் தீரன் தொழிற்சங்க பேரவை தலைவர் ஆறுச்சாமி,துணைத் தலைவர் ஐயாசாமி, தலைமை நிலைய செயலாளர் வடிவேல் மற்றும் மகளிரணி தலைவர் சூர்யகலா, செயலாளர் கிருஷ்ணவேணி மற்றும் நிர்வாகிகள் மணிவண்ணன், ராஜேஷ்குமார், செந்தில்குமார், சுரேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.