ரேஸ்கோர்ஸ்சில் இளைஞர்கள் போராட்டம்

 

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையை சேர்ந்த இளைஞர்கள் இன்று காலை முதல் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அதிக எண்ணிக்கையில் குவிந்து போராடி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஆனால், மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். மேலும், தாங்கள் அறவழியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த தகுந்த இடம் ஒதுக்கி தர வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இதை ஏற்க மறுத்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.