தூய்மை பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர்

கோவை கிருஷ்ணசாமி சாலையில் நடைபெற்றுவரும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் இன்று (26.09.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட கிருஷ்ணசாமி சாலையின் இருபுறங்களிலும் உள்ள புற்கள், குப்பைகள் மற்றும் தேவையற்ற மண் ஆகியவற்றை தூய்மை பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தி அவற்றை வாகனங்கள் மூலம் ஏற்றிச் செல்லும் பணிகளை பார்வையிட்ட ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் சாலைகளில் குப்பைகளை கொட்ட கூடாது, குப்பைத் தொட்டிகளில் மட்டுமே குப்பைகளை கொட்ட வேண்டும் என அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்கள்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மண்டல உதவி ஆணையாளர் மகேஷ்கனகராஜ், செயற்பொறியாளர் சசிபிரியா, உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, உதவி பொறியாளர் கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தன