கோவையில் நேற்று ஒரே நாளில் 287.1 மில்லி மீட்டர் மழைப் பதிவு

கோவை மாவட்டம் மற்றும் மாநகரப் பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மொத்தமாக 287.1 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.

பேரிடர் மேலாண்மைத் துறையினர் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ள பகுதியில் 26  மில்லிமீட்டர் மழைப் பொழிவும், அன்னூர் பகுதியில் 6 மில்லி மீட்டர் மழை பொழிவும், விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் 13 மில்லி மீட்டர் மழை பொழிவும், வால்பாறையை அடுத்த சின்கோனா பகுதியில் 17 மில்லிமீட்டர் மழை பொழிவும், சின்னக்கல்லார் பகுதியில் 19 மில்லி மீட்டர் மழை பொழிவும் பதிவாகியுள்ளது.

இதுபோக வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் பகுதிகளில் 27 மில்லி மீட்டர் மழைப் பொழிவும், வால்பாறை தாலுகாவில் 26 மில்லி மீட்டர் மழைப் பொழிவும், சோலையாறு பகுதியில் 15 மில்லி மீட்டர் மழைப் பொழிவும், ஆழியாறு பகுதியில் 6.2 மில்லி மீட்டர் மழைப் பொழிவும், சூலூர் பகுதியில் 40 மில்லி மீட்டர் மழைப் பொழிவும், பொள்ளாச்சி பகுதியில் 9.3 மில்லி மீட்டர் மழைப் பொழிவும், கோவை தெற்கு பகுதியில் 36 மில்லி மீட்டர் மழைப் பொழிவும் பதிவாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் மொத்தமாக 287.1 மில்லி மீட்டர், ஒரே நாளில் சராசரியாக 20.51 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.