கொரோனா நோய் தொற்று தடுப்பு ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களின் கொரோனா நோய் தொற்று தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகர காவல்துறை ஆணையாளர் சுமித் சரண், கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர், “அரசு மருத்துவமனை உள்ளிட்ட உள்நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை கொடுக்க வேண்டும். சளி காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.