கோவையில் கொரோனாவுக்கு 16 பேர் பலி !

கோவையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 பேர், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர், தனியார் மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்களில் 10 ஆண்கள், 6 பெண்கள் ஆகும்.

இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி இன்று (19.8.2020) கோவையில் ஒரே நாளில் 394 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கோவை மாவட்டம், காரமடை அருகே வாசனைத் திரவியம் தொழிற்சாலை உள்ளது. அதில் 50க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்கு வேலை செய்யும் ஒருவருக்கு காய்ச்சலினால் தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து தொழிற்சாலையில் பணியாற்றிய வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர நரசீபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 23 வயது ஆண் ஆசிரியர், 48, 43, 54 வயது ஆண் காவலர்கள் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர செல்வபுரத்தை சேர்ந்த 29 பேர், காரமடையை சேர்ந்த 20 பேர், போத்தனூரை சேர்ந்த 19 பேர், ரத்தினபுரியை சேர்ந்த 15 பேர், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 14 பேர், சூலூரை சேர்ந்த 13 பேர், துடியலூரை சேர்ந்த 11 பேர், பொள்ளாச்சியை சேர்ந்த 10 பேர், ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த தலா 9 பேர், பீளமேடு, மதுக்கரையை சேர்ந்த தலா 8 பேர், சிங்காநல்லூரை சேர்ந்த 7 பேர், குனியமுத்தூர், கணபதியை சேர்ந்த தலா 6 பேர் உள்பட 394 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 158 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 286 பேர் பூரண குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 7 ஆயிரத்து 221 பேர் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 720 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.