உலக மூட்டுவாத தின விழிப்புணர்வு நடை பயணம்

கோவை, பிரகதி மருத்துவமனை சார்பில் உலக மூட்டுவாத தினத்தையொட்டி விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இதில் முழங்கால் மூட்டு மற்றும் இடுப்புமூட்டு  மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் K.பாக்யராஜ், கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நடைபயணம் பிரகதி மருத்துவமனையில் தொடக்கி அண்ணாசிலை முடிவடைந்தது.