ரீபோஸ் இண்டஸ்ட்ரீஸ் – பெட்டிங் இண்டஸ்ட்ரீஸ் ஆப் அமெரிக்கா ஒப்பந்தம்

ரீபோஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பெட்டிங் இண்டஸ்ட்ரீஸ் ஆப் அமெரிக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதிக வாடிக்கையாளர் சந்தையை கொண்டுள்ள இந்தியாவில் பெட்டிங் பெட்டிங் இண்டஸ்ட்ரீஸ் ஆப் அமெரிக்கா நிறுவனத்தின் பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்ய ரீபோஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

2012ம் ஆண்டு துவக்கப்பட்டுள்ள ரீபோஸ் நிறுவனம் கடந்த 2016-17ம் நிதியாண்டில் 65 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது. இந்நிறுவனம் தூங்கும் பொருட்கள் தொடர்பான உயர்தர தலையணை, பிட்டர் ஷீட் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கிறது. இந்நிறுவனம் தென்னிந்தியாவில் 5 மாநிலங்களில் 1400 ஷோரூம்களையும் 40 ஸ்லீப் ஸ்டேஷன்  ஷோரூம்களையும் கொண்டுள்ளது.

ரீபோஸ் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.பாலச்சந்தர் கூறுகையில்: பெட்டிங் இண்டஸ்ட்ரீஸ் ஆப் அமெரிக்கா நிறுவனத்தின் பொருட்களின் விற்பனை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. வசதி படைத்த வாடிக்கையாளர்களுடன் இணைய இது எங்களுக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பெட்டிங் இண்டஸ்ட்ரீஸ் ஆப் அமெரிக்கா பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறது என்று தெரிவித்தார்.

ரீபோஸ் தலைமை செயல்பாட்டு அதிகாரி ராம்நாத் பட் கூறுகையில்: அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்திலான தூங்கும் அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஒவ்வொரு மெத்தையும் தயாரிக்கப்பட்டது என்பதைவிட கையால் வடிவமைக்கப்பட்டது என்று சொல்வதே சிறந்ததாகும். இது போன்ற தரமான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக நல்ல பங்குதாரரை  கண்டுபிடிப்பதற்காக நாங்கள் அதிக நேரத்தை செலவிட்டு ஒரு நல்ல நிறுவனத்துடன் இணைந்து உள்ளோம் என்று தெரிவித்தார்.

ரீபோஸ் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி வி.பாலாஜி கூறுகையில்: இது போன்ற மெத்தைகளை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். நகர்ப்புறங்களில் கடும் பணிச்சுமையில் இருக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் உடல் நலத்தை பேணிக்காக்க தூக்கம் இன்றியமையாததாக உள்ளது. எனவே அவர்கள் நல்ல ஒரு மெத்தையை தேர்ந்தெடுக்கவே விரும்புகின்றனர். ஆகவே பெட்டிங் இண்டஸ்ட்ரீஸ் ஆப் அமெரிக்காவின் பொருட்கள் அவர்களின் தேவையை நிச்சயம் பூர்த்தி செய்யும் என்று தெரவித்தார்.