கோவை ஞானி எதிர்க் கருத்திற்கும் மதிப்பளிக்கும் மாமனிதர்

– கவிஞர் அவை நாயகன்

தமிழ் இலக்கியம், தத்துவயியல், கருத்தியியல் எனப் பல்வேறு தளங்கள் மட்டுமல்லாது மார்க்ஸியம் என்ற கருத்தியியலில் மிகப்பெரிய பங்களிப்பைக் கொடுத்தவர்.

எப்படிப்பட்ட நேர் எதிர்க்கருத்தாக இருந்தாலும் அதற்குரிய பதிலை அரவணைப்புடன் விவாதிப்பார். இவரது எழுத்துகளில் “மார்க்ஸியமும் தமிழ் இலக்கியமும்”, “கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை”, இதுபோக ‘நிகழ்’, ‘தமிழ்நேயம்’ போன்ற பத்திரிகைகளும் எனக்குப் பிடித்தமானவை.

எனது முதல் மொழிபெயர்ப்பு நூலை வெளியிடுவதற்கு முன் இவர் அதில் சில திருத்தங்கள் கூறி அதனை இவரது இதழில் வெளியிட்டார். அதுமட்டுமின்றி, எனது முதல் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ளார். எப்பொழுதும் எந்நேரமும் இவரைப் பார்க்க செல்வோம். கோவைக்கு நெருங்கிய தொடர்பிருப்பதால் இவரது இழப்பு பேரிழப்பு.