ஞானிக்குள் எல்லா கடவுள்களும் கரைந்துள்ளனர்

– பேரூர் ஜெயராமன்

நான் எழுத்தாளன் இல்லை. ஞானி என் நூலுக்கு முன்னுரைஎழுதவில்லை. ஆனால் ஞானியின் அறிவுரைகளை எனக்குள் பதிப்பித்துள்ளேன்.
“கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை” என்ற நூலை, நாங்களிருவரும் சிவகாசி சென்று இரண்டு நாட்கள் தங்கி அச்சிட்டு வந்தோம். ஞானிக்குள் எல்லா கடவுள்களும் கரைந்து கிடக்கின்றனர். ஞானி எனக்குள் கலகத்தாரராக, நவீன ராமானுஜராகக் கரைந்துள்ளார்.
என்னைவிட 14வயது மூத்தவரான இவர் என்னை, அண்ணா… ஜெயராமண்ணா என அழைக்கும் மென்மையான குரல் எனக்குள் என்றும் தென்றலாக வீசும்.ஞானிசாகமாட்டார். பலருடைய நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்… தமிழாக.