ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சார்பாக கல்வி உதவித்தொகை

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக இக்கல்லூரியில் பயிலும் 12 மாணவ, மாணவியருக்கு ரூ.5000 /- வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பிரபு கல்லூரியின் முதல்வர் சிவகுமாரிடம் வழங்கினர். இந்நிகழ்வின் பொழுது முன்னாள் மாணவர் சங்கத்தின் பொருளாளர் ஷோபனா உடன் இருந்தார்.