லயன்ஸ் கிளப் ஆப் கேலக்ஸி சார்பில் கொரோனா விழிப்புணர்வு

லயன்ஸ் கிளப் ஆப் கேலக்ஸி சார்பில் இந்த ஆண்டின் தொடக்க விழாவாக கோவைப்புதூரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தாள்கள் வழங்கப்பட்டது.

இதில் தலைவர் PV. மாதவன், செயலாளர் இளங்குமரன் மற்றும் பொருளாளர் ரகுபதி, சங்கத்தின் பட்டயத் தலைவர் முத்துசாமி, மண்டலத் தலைவர் ஜீவானந்தன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆண்டின் தொடக்க விழாவாக சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.