இறந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அகில பாரத அனுமன் சேனாவினர் அஞ்சலி

சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு அகில பாரத அனுமன் சேனாவினர் அஞ்சலி செலுத்தினர்.

இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக் பகுதியில் சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்டு இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

நாடு முழுவதும் சீன தயாரிப்புகளை புறக்கணிப்போம் என எதிர்ப்பு குரல்கள் வலுத்து வரும் நிலையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் அகில பாரத அனுமன் சேனாவின் சார்பில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். அதன் பின் அனுமன் சேனாவின் நிறுவன தலைவர் ஸ்ரீதரன் ஜி செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்திய ராணுவத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைவரும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செய்ய வேண்டும் என்றும் சீனவுக்கு எதிராக  கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த ராணுவ வீரர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இதில் அகில பாரத அனுமன் சேனாவின்   உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.