“நியு இந்தியா ஃபாரம்” சார்பில் காணொளி காட்சியில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

சர்வதேச யோகா தினமான இன்று “நியு இந்தியா ஃபாரம்” சார்பில் காலை 7.30 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஆர்.கே.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சுடர்கொடி, உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா மஹாவித்யாலயம் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரி செயலாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம பிரியா அம்பா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஷியாம் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இணைய வழியில் கலந்து கொண்ட 200 பேருக்கு யோகா பயிற்சியினை குகன் வழங்கினார்.