தி வோடஃபோன் கோயம்புத்தூர் மாரத்தான் 2017

தி வோடஃபோன் கோயம்புத்தூர் மாரத்தான் நிகழ்வு பதிப்பு 2017, அக்டோபர் 1ம் தேதி ஞாயிறன்று நடைபெறவுள்ளது. மாநகரத்தை உற்சாகத்தில் ஆழ்த்த 13500 க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்நிகழ்வில் 13500க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவு செய்து ஒரு புதிய உயரத்தை எட்டியிருப்பதால் இந்நிகழ்வின் 5வது பதிப்பு பெருமை கொள்வதற்கு காரணம், 2017 அக்டோபர் 1ம் தேதி ஞாயிறன்று நடைபெற விருக்கின்ற மாரத்தான் ரேஸ் தினத்தன்று வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு வழங்கப்படவுள்ள மெடல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ டீ-சர்ட் அமைப்பாளர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.

கோயம்புத்தூர் ரன்னர்ஸ் மற்றும் ஷோ ஸ்பேஸ் ஈவன்ட்ஸ் ஆகியோரின் ஆதரவோடு இந்த மாரத்தான் நிகழ்வை கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேசன் (CCF) இந்நகருக்கு கொண்டு வருகிறது. இந்த நிகழ்வானது, கோயம்புத்தூர் மாநகரின் உத்வேக உணர்வை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனையையும், கவனிப்பையும் மற்றும் ஆதரவையும் வழங்குவதற்காக தன்னையே அர்பணித்துக் கொண்டிருக்கிற ஒரு பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையான CCFக்கு உதவுவதற்காக நடத்தப்படுவதால், கோயம்புத்தூர் வாழ்மக்களின் தாராளமனதையும், அறச் சிந்தனையையும் நேர்த்தியாக வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் செயல்பட உள்ளது..