பிரபல சுற்றுலாத் தலமான மச்சு பிச்சு மீண்டும் திறப்பு

கொரோனாவின் அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த பிரபல சுற்றுலாத் தலமான மச்சு பிச்சு ஜூலை 1ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. 2500 அடி உயரமுள்ள மலை உச்சியில் அமைந்துள்ள மச்சு பிச்சுவை உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

இங்கு ஒரு நாளைக்கு 3,000 பார்வையாளர்கள் வருகை தந்து வந்தனர். ஆனால் தற்போது கொரோனாவின் பாதிப்பினால் சூழலுக்கு ஏற்ப மச்சு பிச்சுவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஒரு நாளைக்கு 675 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவித்துள்ள குஸ்கோ (Cuzco) பிராந்திய அதிகாரிகள், பயணிகள் முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.