500 நரிக்குறவர் குடும்பங்களுக்கு நிவாரணம்

கோவை குறிச்சிப் பகுதியில் குடியிருக்கும் 500 நரிக்குறவர் குடும்பங்களுக்கு கொரோனா பேரிடர் நிவாரணப் பொருட்களை கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மு.முத்துச்சாமி வழங்கினார்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு ஆரம்பித்த நாள் முதல் திமுகவினர் மக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நோய் தொற்று ஏற்படாத வண்ணம் சமூக இடைவெளி விட்டு வழங்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கோவை குறிச்சிப் பகுதியில் பண்டிட் நேரு பள்ளி அருகாமையில் உள்ள காண்டி காலனி குடியிருப்புப் பகுதியில் உள்ள நரிக்குறவர் குடும்பங்களுக்கு அரிசி,பருப்பு, காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மு.முத்துச்சாமி வழங்கினார்.

இதில் குறிச்சி பகுதி கழக செயலாளர் கார்த்திகேயன், கிளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் தியாகு, வேலாயுதம், இளைஞர் அணி புவனேஷ், மௌலானா, மகளிர் அணி மஞ்சுளா, மாதவன்முரளி கிருஷ்ணா, கனகராஜ், நமச்சிவாயம் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.