நம் நதிகள் அழிந்து கொண்டிருக்கின்றன

இந்திய நதிகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிரு க்கிறது. வளர்ந்து கொண்டிருக்கும் மக்கள் தொகையினாலும் அதன் வளர்ச்சி தேவைகளினாலும் நம்முடைய வற்றாத ஜீவநதிகள் எல்லாம் இப்போது பருவகால நதிகளாய் மாறிவிட்டன. பல சிறிய நதிகள் மறைந்தேவிட்டன. பருவமழை காலங்களில் நதிகள் கட்டுக்கடங்காமல் ஓடி மழைக் காலம் முடியும்போது மறைந்து போகின்றன. இதனால், வெள்ளம் மற்றும் வறட்சி அடிக்கடி நிகழ்கிறது.

அதிர்ச்சிகரமான உண்மை

  • 25% இந்தியா பாலைவன மாய் மாறிக்கொண்டு இருக்கிறது.
  • இன்னும் 15 ஆண்டுகளில், உயிர்வாழத¢ தேவை யான நீரில் 50% மட்டுமே நமக்கு இருக்கும்.
  • உலகில் அழிந்து வரும் நதிகளில் முதன்மையானதாக கங்கை இருக்கிறது.
  • கடந்த வருடத்தின் பெரும்பாலான காலம், கோதாவரி வற்றியே இருந்தது.
  • காவேரியின் ஓட்டம் 30% குறைந்துவிட்டது. கிருஷ் ணா, நர்மதா ஆறுகள், 60% வற்றிவிட்டது.

ஒவ்வொரு மாநிலத்திலும் வற்றாத நதிகள் அனைத்தும், ஒன்று பருவகால நதிகளாக மாறி வருகின்றன அல்லது அழிந்தே விட்டன. கேரளத்தின் பாரத்புழா, கர்நாடகத்தின் கபினி, தமிழகத்தின் காவிரி, பாலாறு மற்றும் வைகை, ஒடிசாவின் முசல், மத்தியப்பிரதேசத்தின் க்ஷிப்ரா இவற்றில் சில. பல சிறிய நதிகள் மறைந்தேவிட்டன.

நம் நதிகளை காப்போம்

நதிக்கரைகளில் ஒரு கி.மீ. பரப்பளவில் கணிசமான அளவு மரங்களை வளர்ப்பது, விவசாய நிலங்களில் பழமரங்கள், அரசு நிலங்களில் காடுகள் வளர்ப்பது, நம் நாட்டிற்கும், சமூகத்திற்கும், சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார பலன்களை மிக பெரிய அளவில் அளிக்கும். உறுதியான அரசு கொள் கையும் செயல்பாடும், நதி களுக்கு புத்துயிரூட்டும்.

மரங்கள் எவ்வாறு நதிகளைப் பாதுகாக்கும்

இந்திய நதிகள் பெரும்பாலும் மழைப் பொழிவினாலேயே நீர் பெறுகின்றன. மழை இல்லாத காலங்களிலும் அவை ஓடிக்கொண்டிருப்பது எப்படி? வற்றாத ஜீவநதிகள் மழை இல்லா காலங்களிலும் ஓடி கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் மரங்கள். மரங்களின் வேர்கள் மண்ணை நுண்துகளாய் மாற்றி மழை நீரை உறிஞ்சி அதை இருத்திக்கொள்கிறது. மண்ணில் இருக்கும் இந்த நீர் படிப்படியாக ஆற்று நீரோடு கலந்து வருடம் முழுவதும் ஆறு ஓட வழிவகுக்கிறது.

மரங்கள் இல்லையெனில் வெள்ளம், வறட்சி போன்ற பேராபத்துகள் சுழற்சியாய் நடந்து கொண்டே இருக்கின்றன. மழைக்காலங்களில் அதிகப்படி யான நீர் வெள்ளமாய் பெருக் கெடுத்து ஓடும். மண் நீரை உறிஞ்சாததால், மழைக்காலம் முடிந்த பின் ஆறு வற்றி விடுகிறது. மண் ணில் ஈரப்பதம் இல்லாததே காரணம்.

ஆற்றங்கரைகளில் மரம் வளர்ப்பதினால் ஏற் படும் பல நன்மைகளை அறிவியல் ஆராய்ச்சி கள் தெளிவுபடுத்து கின்றன:

  • ஆறுகளை வற்றாத ஜீவநதிகளாய் மாறும்
  • வெள்ளப்பெருக்கைக் குறைக்கும்
  • வறட்சி நிலையை எதிர்க்கும்
  • நிலத்தடி நீரை மேம்படுத்தும்
  • மழை அளவை சீர்செய்யும்
  • பருவநிலை மாற்றங்களை எதிர்க்கும்
  • மண் அரிப்பைத் தடுக்கும்
  • தண்ணீர் தரத்தை உயர்த்தும்
  • மண் வளத்தை உயர்த்தும்

 

நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்

சத்குரு அவர்கள் செப் 3ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு ( 30 நாட்களுக்கு ) நதிகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளார். செப் 3ம் தேதி கோவையில் துவங்கும் ‘நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்’ (‘Rally For Rivers”) என்ற இந்த விழிப்புணர்வு இயக்கம்   16 மாநிலங்களில் 20கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெற உள்ளது.

இதில் சத்குரு அவர்கள் தாமே  சுமார் 7000 கிமீ வாகனம் ஓட்டி செல்வார். அவரோடு வழியில் பல தலைவர்களும் பிரபலங்களும் கலந்துகொள்வார்கள்.

தமிழகத்தில் கோவை, கன்னியாகுமாரி, மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை போன்ற நகரங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசாங்க அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள், மாணவர்கள், பொது மக்கள் ஆகியோர் இவ்வியக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

8000980009 க்கு ஒரு மிஸ்டு கால் வழங்குவதன் மூலம் இந்த இயக்கத்திற்கு உங்களது ஆதரவை  அளியுங்கள்.மேலும் விபரங்களுக்கு  rally-for-rivers.org ஐ தொடர்பு கொள்ளுங்கள்.

“இது போராட்டமல்ல. இது ஆர்பாட்டமல்ல. நம் நதிகள் வற்றி வருவதைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் இது. தண்ணீர் குடிக்கும் ஒவ்வொரு மனிதரும் நம் நாட்டின் உயிர்நாடிகளான நதிகளை காக்க வேண்டும்”.