அத்தியாவசிய தேவைகளுக்கு நகரம் இயங்கும்

– அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து நிறுத்தபட்டுள்ள நிலையில், அனைத்து சோதனை சாவடிகளிலும் அத்தியாவசியப் பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், கேஸ்சிலிண்டர்கள் ஏற்றிவரும் வாகனங்கள், இதர சரக்கு வாகனங்கள், தவிர்க்க இயலாத காரணங்களான இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள் ஆகியவை மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்க முற்றிலும் தடை செய்யப்படுகிறது. என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

விமானநிலையத்தில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் இதற்கென தனியாக மருத்துவக்குழு நியமிக்கப்பட்டு வெளிநாடுகளிலிருந்து வருகைபுரிந்த பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், விழிப்புணர்வு மற்றும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், திருக்கோயில்கள், சுற்றுலாத் தலங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், வாரச்சந்தைகள், ஒருங்கிணைந்த குளிர்சாதன வசதி கொண்ட பெரிய ஜவுளிக் கடைகள், பெரிய நகைக்கடைகள், பல்வகை பொருட்களை விற்பனை செய்யும் மிகப்பெரிய கடைகள் போன்றவற்றை மார்ச் – 31ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் வாளையார், முள்ளி, மேல்பாவியூர், வேலந்தபாளையம், வீரப்பகவுண்டனூர், கோபாலபுரம்,  மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, ஆனைகட்டி ஆகிய அனைத்து சோதனை சாவடிகளிலும் அத்தியாவசியப் பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், கேஸ்சிலிண்டர்கள் ஏற்றிவரும் வாகனங்கள், இதர சரக்கு வாகனங்கள், தவிர்க்க இயலாத காரணங்களான இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள் ஆகியவை மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இவை தவிர மற்ற வாகனப் போக்குவரத்துக்கள் 31.03.2020 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 கீழ் உத்தரவுகள் பிறப்பித்துள்ளார். அதன்படி, இன்று மாலை 6 மணி முதல் அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, மகிழுந்துகள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது. மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்க முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

இத்தடை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றின் போக்குவரத்துக்கும், விற்பனைக்கும் யாதொரும் தடையும் இல்லை.

கோவை மாவட்ட மக்கள் அனைவரும் 144 தடை உத்தரவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களை தனிமைப்படுத்தி கொரோனா வைரஸ் பரவமால் தங்களை பாதுகாத்துக்  கொள்ளவேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகளால் குடும்ப உறுப்பினர்களுக்கும், மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க பேருதவியாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். வெளிநாடு சென்று திரும்பிய நபர்களுடன் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் இந்த நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். என மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.