வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப அட்டைகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும்

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.3250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் குடும்ப அட்டைகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இருக்கும் இடத்திலிருந்து நகரமுடியாதவர்களுக்கு அவர்கள் இடத்திற்கே சென்று சூடான சுவையான உணவு வழங்கப்படும்.

கட்டிட தொழிலாளர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் சிறப்பு தொகுப்பாக 1000 வழங்கப்படும்.

மார்ச் மாதத்திற்கான ரேசன் பொருட்களையும் ஏப்ரலில் வாங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நடைபாதை வியாபாரிகளுக்கு கூடுதலாக தலா 1000 ரூபாய் வழங்கப்படும்.

நியாய விலைக் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்க டோக்கன் முறையில் பொருட்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

என தெரிவித்துள்ளார்.