மகளிர் சுய உதவிக்குழுகளின் முகக்கவச கண்காட்சி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள முகக்கவசங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, நேரில் பார்வையிட்டார்.   இக்கண்காட்சியில் தமிழ்நாடு மகளிர் வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) செல்வராஜ் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய ஒரு வகை வைரஸ் கிருமியாகும். நோய் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு முன்னெச்சரிகை நடவடிக்கைகள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முககவசங்கள், பற்றாக்குறையை தவிர்க்கும் பொருட்டு கோவை மாவட்டத்தில் மகளிர் திட்ட அலுவலகத்தின் மூலம் பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு சிறந்த முறையில் ஊரகப்பகுதி மற்றும் நகர்புற பகுதிகளில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுவினரால் நல்ல முறையில் தயாரிக்கப்பட்டுள்ள முககவசங்கள் மொத்தமாவும், தேவைக்கேற்பவும் வழங்கிட தயார் நிலையில் உள்ளது.

இந்த முகக்கவசங்கள் நெய்யப்படாத(Non woven),  பருத்தி துணிகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பருத்தி துணியினால் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் ரூ.8 முதல் ரூ.10 வரையிலும், நெய்யப்படாத(Non woven) முகக்கவசங்கள் ரூ.17 மதிப்பிலும் விற்பனை செய்யப்படுகிறது.  மேலும், 25 மகளிர் சுயஉதவிக்குழுவினர்கள்  சோப் ஆயில், கைகழுவும் திரவம், பினாயில், பிளீச்சிங்பவுடர் உள்ளிட்ட சுகாதாரப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும், மகளிர் குழுக்களை சேர்ந்த 1000 மகளிர்கள்  கொரோனா விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரத்துறையின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு Hand sanitizer  தயாரிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி நிறைவு பெறும் சமயத்தில் Hand sanitizer அதிக அளவில் வழங்க முடியும்.

முககவசங்கள்; தேவைப்படும் பொதுத் துறை நிறுவனங்களோ, தனியார் நிறுவனங்களோ, தொண்டு நிறுவனங்களோ மற்றும் வணிக நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம், மகளிர் திட்ட அலுவலகத்தை (பழைய கட்டிடத்தில் இரண்டாவது தளம்) தொலைபேசி எண்: 0422 – 2301855 என்ற தொலைப்பேசி எண்ணிற்க்கு தொதார்பு கொள்ளலாம்.  என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தொரிவித்துள்ளார்.