சூப்பர் பாட்டம்ஸ் அறிமுகப்படுத்தும் சூப்பர் டிரை ஃபீல் நாப்பி

மறுபடியும் பயன்படுத்தத்தக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பான துணி டயாபர்கள் உள்பட குழந்தைகளுக்கான பொருள்களைத் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனமான சூப்பர் பாட்டம்ஸின் சமீபத்திய அறிமுகம் சூப்பர் நாப்பி.  பச்சிளம் குழந்தைகளின் மென்மையான பட்டுப் போன்ற சருமத்துக்கு ஏற்ற வகையில் இயற்கைப் பருத்தியால் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் நாப்பி என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தையின் வாழ்க்கையில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், பிளாஸ்டிக் பயன்பாட்டையும் குறைக்கும் சூப்பர் பாட்டம்ஸ் நிறுவனத்தின் முனைவை இந்தப் பொருளின் அறிமுகம் மேலும் வலுப்படுத்தும்.

குழந்தைகளுக்கான டயாபரில் ஏராளமான பொருள்கள் இருந்தாலும், குழந்தையின் அன்றாட வாழ்வில் ‘டயாபர் ஃப்ரீ டைம்’ என்னும் சிந்தனைப் பொருள்கள் மிகக் குறைவாகவே உள்ளன. சூப்பர் நாப்பி அறிமுகம் மூலம் சூப்பர் பாட்டம்ஸ் குழந்தைகளுக்கான ‘டயாபர் ஃப்ரீ டைம்’ தருணத்தை இன்னும் வசதியாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சூப்பர் நாப்பி-இல் 3 வித்தியாசமான அம்சங்கள் உள்ளன. டயாபர் இல்லாத நேரத்தில் குழந்தை சிறுநீர் கழித்தாலும் கூட அதன் ஈரத்தன்மையை குழந்தை உணராத வகையில் இதன் உட்புறத்தில் ‘சூப்பர் டிரை ஃபீல்’ அடுக்கு பொருத்தப்பட்டுள்ளது. நடுவிலுள்ள இயற்கைப் பருத்தி பேடிங்க் அடுக்குகள் நாப்பிக்குள் உறிஞ்சிக் கொள்ளும் தன்மையைத் தரும். மேலும் இதன் ஓரத்திலுள்ள வித்தியாசமான மென்மை எலாஸ்டிக்ஸ் பிரச்சினையற்ற நிலையை உறுதிப்படுத்தும்.

அறிமுகம் குறித்து சூப்பர் பாட்டம்ஸ் நிறுவனர் அண்டு சிஇஓ பல்லவி உத்தகி கூறுகையில் ‘பெரும்பான்மை இந்தியப் பெற்றோர்கள் வழக்கமான நாப்பிக்கள் மூலம் பகல் நேரத்தில் தங்கள் குழந்தைகளுக்கு டயாபர் ஃப்ரீ டைமைத் தருகின்றனர். இருப்பினும் இந்த நாப்பிக்கள் காரணமாகக் குழந்தை ஈரத் தன்மையை உணர்வதால் அசௌகரியம் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டே சூப்பர் பாட்டம்ஸ்ஸில் உள்ள தாய்மார்கள் குழு  நீண்ட ஆய்வு மற்றும் சிந்தனைக்குப் பிறகு சூப்பர் நாப்பி என்னும் இந்தியாவிலேயே புதுமையான மற்றும் டயாபர் ஃப்ரீ டைமுக்காகவே பிரத்யேகமாகத் தயாரித்துள்ளது. இது குழந்தை ஈரத்தன்மையை உணர விடாமல் பாதுகாக்கிறது. இதிலுள்ள மென்மையான எலாஸ்டிக் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் டயாபர் ஃப்ரீ டைமில் பெற்றோர் குழந்தையைச் சமாளிக்க உதவுகிறது’ என்றார்.

கவர்ச்சியான பிரிண்ட் மற்றும் வண்ணங்களில் சூப்பர் நாப்பி கிடைக்கும்.  அஜோ–ப்ரீ பாதுகாப்பு சாயங்களால் தயாரிக்கப்பட்டுள்ளதால், மென்மையான குழந்தையின் சருமத்துக்கு முழுமையான பாதுகாப்பைத் தரும்.  கீழ்க்காணும் 3 வகையான பேக் மற்றும் விலைகளில் நாப்பிக்கள் கிடைக்கும்.

3 கொண்ட பேக் ரூபாய். 420-க்கும், 6 கொண்ட பேக் ரூபாய் 780-க்கும், 12 கொண்ட பேக் ரூபாய் 1380-க்கும் கிடைக்கும். இவை சூப்பர்பாட்டம்ஸ்.காம், அமேசான் மற்றும் இந்தியாவிலுள்ள அனைத்து முன்னணி பேபி-கேர் கடைகளிலும் சூப்பர் நாப்பி கிடைக்கும்.